Published Date: February 2, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
மதுரையில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதனை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு துவக்கி வைத்தார். பின் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுடன் கைகுலுக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி இலக்கை நோக்க மிக கவனமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, மேடைப்பந்து, ஹாக்கி, நீச்சல், கிரிக்கெட் மற்றும் கைப்பந்து ஆகிய 11 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலைராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran